Home நாடு அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? – பக்காத்தான் தலைவர்கள் சந்திப்பு

அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? – பக்காத்தான் தலைவர்கள் சந்திப்பு

474
0
SHARE
Ad

Pakatan-Logo-Featureபெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 11 – எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அன்வார் இப்ராகிமுக்கு 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பக்காத்தான் தலைவர்கள் நேற்றிரவு நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அன்வாருக்கு கூட்டரசு நீதிமன்றம் சிறைத்தண்டனையை உறுதி செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐசெகவின் தேசிய செயலர் அந்தோணி லோக், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் பொருட்டு பாஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ள நிதி திரட்டும் விருந்து நிகழ்ச்சிக்குப் பின்னர் பக்காத்தான் தலைவர்களின் அவசரக்கூட்டம் நடைபெறும் என்றார்.

“எனினும் அன்வாருக்கு பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்பது யார் என்பது குறித்து பக்காத்தான் தலைவர்களின் செயலவைக் கூட்டத்திலேயே முடிவு செய்யப்படும்,” என்றார் அந்தோணி லோக்.

#TamilSchoolmychoice

நேற்றிரவு நடைபெற்ற பக்காத்தான் தலைவர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.

அன்வாருக்கு பின்னர் பக்காத்தான் சார்பில் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்கப் போவது யார் என்பது விரைவில் தெரிய வரக்கூடும்.