Home அவசியம் படிக்க வேண்டியவை பிரபல விளம்பர ஊடகமான ‘நிச்’-ஐ டுவிட்டர் வாங்கியது!

பிரபல விளம்பர ஊடகமான ‘நிச்’-ஐ டுவிட்டர் வாங்கியது!

574
0
SHARE
Ad

blogging-nicheசான் பிரான்சிஸ்கோ, பிப்ரவரி 16 – ‘டுவிட்டர்‘ (Twitter) நிறுவனம், ‘வைன்‘ (vine) மற்றும் யூ-டியூப்‘ (You Tube) போன்ற தளங்களில் வெளியாகும் தனிநபர் விளம்பரங்கள் மற்றும் புகழ்பெற்ற நிறுவனங்களின் விளம்பரங்களை பிரபலப்படுத்தும் நிச்‘ (Niche) நிறுவனத்தை வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நவீன யுகத்தில் எழுத்துருக்களாக வெளியாகும் விளம்பரங்களை விட, சுவாரஸ்யமான காணொளி விளம்பரங்களே மக்களின் கவனத்தை அதிகம் ஈர்க்கின்றன. இணைய தளங்களின் ஒவ்வொரு பக்கங்களிலும் நூற்றுக்கணக்கான விளம்பரங்கள் நம்மை தொடர்ந்து இம்சித்து வருகின்றன.

எனினும், நாம் அதுபோன்ற விளம்பரங்களைப் பார்த்துதான் நமக்கு தேவையான பொருட்களை வாங்குகின்றோம். இதனை உணர்ந்துள்ள சமூக ஊடகங்கள், தற்போது விளம்பரங்களில் மூலமாக அதிகப்படியான வருவாயை ஈட்டி வருகின்றன. இதற்கு டுவிட்டரும் விதிவிலக்கல்ல.

#TamilSchoolmychoice

டுவிட்டர் தனது தளங்களில் விளம்பரங்களை மேற்கொள்ளும் பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தையும், எளிதான செயல்முறைகளையும் ஏற்படுத்துவதற்காக இந்த ‘நிச்’ நிறுவனத்தை வாங்கி உள்ளது.

2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘நிச்’ நிறுவனம், வைன், பேஸ்புக்யூ-டியூப் போன்ற தளங்களின் விளம்பரங்களை பிரபலப்படுத்தி வருகின்றது. இதன் மூலம், பிரபல நிறுவனங்கள், தனி நபர்கள் மிக எளிதான முறையில் தங்கள் விளம்பரங்களை இணையத்தில் பகிர்ந்து கொள்ள முடியும்.

இது தொடர்பாக டுவிட்டர் நிறுவனத்தின் முக்கிய அதிகாரி பல்ஜீத் சிங் கூறுகையில், “பல்வேறு பயனர்களுக்கும் விளம்பரப் படைப்பாளிகளுக்கும் தங்கள் தயாரிப்புகளை பிரபலபடுத்த இந்த ஊடகம் மிகச் சிறந்ததாக இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

எனினும் அவர், நிச் நிறுவனத்துடனான டுவிட்டரின் வர்த்தகம் பற்றி எவ்வித தகவல்களையும் தெரிவிக்கவில்லை.