Home உலகம் போதைப்பொருள் வழக்கில் ஜாக்கிசான் மகன் விடுதலை!

போதைப்பொருள் வழக்கில் ஜாக்கிசான் மகன் விடுதலை!

607
0
SHARE
Ad

Jackie-Chan-Sonபெய்ஜிங், பிப்ரவரி 14 – போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் பிரபல நடிகர் ஜாக்கிசானின் மகனும், நடிகருமான ஜெய்சீ சான் 6 மாத சிறைத்தண்டனைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார்.

சீனாவில் போதைப்பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அங்கு சாதாரண குடிமக்கள் முதல் பல்வேறு பிரபலங்களும் போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். இதனைத் தடுக்க சீனா, கடந்த ஆண்டு பல்வேறு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. பல பிரபலங்கள் அந்த நடவடிக்கைகளில் சிக்கினர்.

இதில் நடிகர் ஜாக்கிசானின் மகன் ஜெய்சீ சானும் கைது செய்யப்பட்டார். கடந்த ஆகஸ்டு மாதம் ஜெய்சீ சானிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரது வீட்டில் இருந்து 100 கிராம் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது. இதன் காரணமாக, அவர் மீது போதைப்பொருள் பயன்படுத்தியது, போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்தது உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

இந்த வழக்கில் அவருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனை காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து ஜெய்சீ சான் நேற்று காலையில் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.