Home கலை உலகம் எதற்கு நான் திருமணம் செய்ய வேண்டும் – சிம்பு அதிரடி

எதற்கு நான் திருமணம் செய்ய வேண்டும் – சிம்பு அதிரடி

826
0
SHARE
Ad

simbuசென்னை, பிப்ரவரி 14 – சிம்பு தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். இவர் சமீபத்தில் காதலர் தின சிறப்பாக தமிழகத்தின் முன்னணி பத்திரிக்கை ஒன்றில் பேட்டியளித்துள்ளார்.

இதில் இந்த வருடம் திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்டதற்கு ”எதற்கு நான் திருமணம் பண்ணிக்கணும்? நான் திருமணத்திற்கு எதிரானவன் இல்லை. திருமணம் என்பது நல்ல புரிதல் கொண்ட ஆணும், பெண்ணும் செய்துகொள்வது.”

“திருமணம் நடப்பதை போல் இப்போது விவாகரத்தும் நடக்கத் தொடங்விட்டது. கல்யாணம் செய்து விவாகரத்தாகி, பின்பு புரிதல் உண்டாகி, அதன்பிறகுதான் கல்யாணம் சரியா உள்ளது.”

#TamilSchoolmychoice

‘ஒரு பெண்ணிடம் சாகும் வரை தோற்கலாம்’ என்ற அளவுக்கு மனதை உடைக்கிற பொண் கிடைக்கட்டும், திருமணம் செய்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார் சிம்பு.