Home கலை உலகம் ராம் கோபால் வர்மாவால் உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டது – நடிகை அனைகா புகார்!

ராம் கோபால் வர்மாவால் உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டது – நடிகை அனைகா புகார்!

609
0
SHARE
Ad

anaikaசென்னை, பிப்ரவரி 17 – கடும் வெயிலிலும், குளிரிலும் தன்னை இயக்குனர் ராம்கோபால் வர்மா நடிக்க வைத்ததால் உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டு விட்டதாக அனைகா புகார் கூறியுள்ளார்.

இவர் தமிழில் வெளியான ‘காவியத்தலைவன்’ படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2013-ஆம் ஆண்டில் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் வெளிவந்த ‘சத்யா 2’ படத்தில் அறிமுகமானவர் அனைகா சோடி.

இப்போது ராம்கோபால் வர்மா தற்போது இயக்கிவரும் படம் ‘365 டேஸ்’. இதில் அனைகா தான் கதாநாயகி. படப்பிடிப்பில் ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி அவர் கூறுகையில்,

#TamilSchoolmychoice

“365 டேஸ் என்ற படத்தில் குளியலறையில் நான் பாடிக்கொண்டே குளிப்பது போல் ஒரு காட்சியை இயக்குநர் ராம்கோபால் வர்மா படமாக்கினார்”.

MG_0831-c“5 நாட்கள் அதிகாலை வேளையில் இந்த பாடல் காட்சியை படமாக்கினார்கள். அப்போது என்னை மிகவும் குளிர்ந்த நீரில் குளிக்க வைத்தார்கள். குளிரில் நடுங்கி போனேன். 5 நாட்கள் படப்பிடிப்பிலும் நான் அவதிக்குள்ளானேன்”.

“அதன்பிறகு கடுமையான வெயிலில் நடிக்க வைத்தார்கள். கொளுத்தும் வெயிலில் நான் ஓடுவது போல் படமாக்கினார்கள். கடும் குளிரிலும், வெயிலிலும் நடித்ததால் என் உடல் முழுவதும் கொப்புளங்கள் ஏற்பட்டன”.

“அந்த வேதனையை தாங்கிக்கொண்டு சிரித்தபடி நடிக்கவேண்டும் என்று இயக்குநர் கூறினார். நான் வேதனைகளை தாங்கிக்கொண்டு அந்த பாடல் காட்சியில் நடித்து முடித்தேன். படப்பிடிப்பு நேரங்களில் ராம்கோபால் வர்மா கடுமையாகவும் நடந்துகொள்வார் என காவியத்தலைவன் நாயகி அனைகா புகார் கூறியுள்ளார்.