பெய்ஜிங், பிப்ரவரி 18 – புதிய அரசு பதவியேற்ற பிறகு முதல் சுற்றுப்பயணமாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா இந்தியாவிற்கு வந்தது, இந்தியாவுடனான அவரது நெருக்கத்தை வெளிப்படுத்தியது.
இதையடுத்து இந்தியாவிற்கும் இலங்கைக்குமான நட்புறவு மகிழ்ச்சியளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் குவா சன்யிங் இன்று ஊடகங்களூகு அளித்த பேட்டியில்
‘‘இலங்கை மற்றும் இந்தியா இரண்டும் நட்பான மற்றும் முக்கியமான அண்டை நாடுகள்’’ என்றார். மேலும் ‘‘இந்தியா மற்றும் இலங்கையுடன் அமைதி மற்றும் வளத்திற்காக நாங்கள் கூட்டுறவை உருவாக்க விரும்புகிறோம்”.
“இந்நிலையில், இந்தியா இலங்கை இடையேயான நெருக்கமான நட்புறவு எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. மூன்று நாடுகளுக்கு இடையே இணக்கமான சூழலை இது உருவாக்கும்“ என்றார்.
சீன அரசின் ஆதிக்கம் மிகுந்த இலங்கையில் மத்திய அரசின் முன்னெடுப்பில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.