Home இந்தியா ஆசியாவிலேயே மிகப்பெரிய விமான கண்காட்சியை துவக்கி வைத்தார் மோடி!

ஆசியாவிலேயே மிகப்பெரிய விமான கண்காட்சியை துவக்கி வைத்தார் மோடி!

576
0
SHARE
Ad

modi-aero-india45பெங்களூரு, பிப்ரவரி 18 – இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பெங்களூருவில் நடந்து வரும் ‘ஏரோ இந்தியா’ விமான கண்காட்சி ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும்.

அந்த வகையில், இந்த ஆண்டு 10-வது அனைத்துலக விமான கண்காட்சி பெங்களூருவில் உள்ள யெலகன்கா ஏர் போர்ஸ் என்ற இடத்தில் இன்று துவங்கியது.

aero-india-6985 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் விமானம் தயாரிக்கும் 328 வெளிநாட்டு நிறுவனங்கள், 295 இந்திய நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

#TamilSchoolmychoice

குறிப்பாக, பிரான்ஸை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான டாஸால்ட்டுடன் 126 விலை மதிப்பு மிக்க ரேபல் பைட்டர் விமானங்களை வாங்கும் திட்டமும் கையெழுத்தாகிறது.

modiaero-india435இதுதவிர, சென்ற காங்கிரஸ் ஆட்சியில் ஹெலிகாப்டர் ஊழலில் சிக்கிய, பின்மெக்கானிக்கா நிறுவனமும் இதில் கலந்து கொள்கிறது. இந்த விமான கண்காட்சியில் பிரதமர் மோடி ரேபல் பைட்டர் விமானங்களை ஓட்டி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

aero-india45651996-ல் பிரதமராக இருந்த தேவகவுடாவுக்கு பிறகு மனைத்துலக விமான கண்காட்சியை துவங்கி வைக்கும் இரண்டாவது பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

aero-india-600