மெல்போர்ன், பிப்ரவரி 22 – உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியாவும் தென்-ஆப்ரிகாவும் மோதின. இதில் இந்தியா 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
உலக்கக்கோப்பை போட்டிகளில் தென்-ஆப்ரிக்காவை வீழ்த்தி வரலாற்றை மாற்றி எழுதியது இந்தியா. டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 307 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பில் தவான் சதம் அடித்தார். ரஹானே 79 ரன்களை குவித்து ஆட்டம் இழந்தார்.
308 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய தென்-ஆப்ரிகா அணி 177 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்திய அணி 4 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியளில் முதலிடத்தில் உள்ளது.