சமீபத்தில் பிரான்ஸில் சமூக ஊடகங்களின் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய அந்நாட்டு உள்துறை அமைச்சர் பெர்னார்ட் கெஸீனுவே, “இணையம் வழியாக தீவிரவாதம் அதிகம் பரப்பப்படுகிறது.
இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக பேஸ்புக், கூகுள், டுவிட்டர் போன்ற ஊடகங்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இணையத்தில் தீவிரவாத பிரச்சாரங்கள் செய்யப்படுகிறது என்று தகவல்கள் கிடைத்ததும் அதனை உடனடியாக நீக்கிட வழிவகை செய்ய வேண்டும்”
கடந்த ஜனவரி மாதத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடத்தப்பட்ட தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.