Home உலகம் கிரிக்கெட்: ஸ்காட்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது இங்கிலாந்து!

கிரிக்கெட்: ஸ்காட்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது இங்கிலாந்து!

556
0
SHARE
Ad

Stuart-Broad-of-England-celebrates-6கிறிஸ்ட்சர்ச், பிப்ரவரி 23 – உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று 14–வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து – ஸ்காட்லாந்து அணிகள் மோதின. ஸ்காட்லாந்து கேப்டன் மாம்சென் டாஸ் வென்று இங்கிலாந்தை முதலில் விளையாட அழைத்தார்.

இங்கிலாந்து தொடக்க வீரர் மொய்ன் அலி சதம் அடித்தார். 91 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 100 ரன்னை தொட்டார். இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 303 ரன் குவித்தது.

England-vs-Scotland,ஸ்காட்லாந்து தரப்பில் ஜோகர்டவே 4 விக்கெட் கைப்பற்றினார். 304 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஸ்காட்லாந்து அணி விளையாடியது.

#TamilSchoolmychoice

இங்கிலாந்து வீரர்களின் அபாரமான பந்துவீச்சில் ஸ்காட்லாந்து விக்கெட்டுகள் சரிந்தன. 128 ரன்னுக்குள் 6 விக்கெட்டை இழந்தது ஸ்காட்லாந்து. அந்த அணி 42.2 ஓவரில் 184 ரன்னில் சுருண்டது.

scotlandஇதனால் இங்கிலாந்து 119 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.