Home உலகம் தென் கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு போர்ப் பயிற்சி – வடகொரிய எதிர்ப்பு!

தென் கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு போர்ப் பயிற்சி – வடகொரிய எதிர்ப்பு!

627
0
SHARE
Ad

03-korea-mapசியோல், பிப்ரவரி 25 – வடகொரியாவின் கடும் எதிர்ப்பை மீறி, தென் கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு போர்ப் பயிற்சியில் ஈடுபட உள்ளன. இந்த பயிற்சி மார்ச் 2-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் தென்கொரியா மற்றும் அமெரிக்க ராணுவங்கள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வடகொரிய நாட்டுத் தலைவர் கிம் ஜாங் உன் தனது ராணுவத்தை போருக்குத் தயாராக இருக்க உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்தில் வடகொரிய ராணுவம் ஏற்பாடு செய்திருந்த மத்திய ராணுவ ஆணையக் கூட்டத்தில் பேசிய கின் ஜாங் உன், “எதிரியின் எந்த வகையான தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.

#TamilSchoolmychoice

தென் கொரியாவும் அமெரிக்காவும் நடத்தும் ராணுவக் கூட்டுப் பயிற்சி வடகொரியாவின் மீது போர்தொடுப்பதற்கான ஒத்திகை முயற்சி” என்றார். வடகொரியா இதுவரை மூன்று அணு ஆயுதச் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.

நான்காவது முறையாக மேற்கொள்ளும்போது, அதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் வடகொரியா மீது பொருளாதாரத் தடைகளும் விதித்தது. இதில் சினமடைந்த வடகொரியா, தன் சினத்தை ராணுவக் கூட்டுப் பயிற்சியின் மீது பிரதிபலிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.