Home நாடு கட்சி விவகாரங்களில் தலையிட வேண்டாம் – சாஹிட்டுக்கு பாலகிருஷ்ணன் எச்சரிக்கை

கட்சி விவகாரங்களில் தலையிட வேண்டாம் – சாஹிட்டுக்கு பாலகிருஷ்ணன் எச்சரிக்கை

483
0
SHARE
Ad

Dato-S.Balakrishnanகோலாலம்பூர், பிப்ரவரி 25 – மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் குறித்து உள்துறை அமைச்சர் சாஹிட் ஹமீடி நேற்று கூறிய கருத்திற்கு மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ எஸ்.பாலகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மஇகா உள்விவகாரத்தில் சாஹிட் ஹமீடி தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இந்திய சமூகத்தின் பிரச்சனைகளை தீர்ப்பதில் தேசியத் தலைவரின் ஆற்றல் குறித்து கேள்வி எழுப்ப சாஹிட்டுக்கு உரிமை இல்லை என்றும் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1966-ம் ஆண்டு சங்கங்களின் பதிவுச் சட்டத்திற்கு ஏற்ப ஆர்ஓஎஸ் (சங்கங்களின் பதிவிலாகா) செயல்பட்டிருந்தால், கட்சிக்கும், பதிவிலாகாவிற்கும் இடையே இவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டிருக்காது என்றும் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும்,“கடந்த 2013-ம் ஆண்டு மத்திய செயலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ராமலிங்கம், அந்த ஆண்டு நடத்தப்பட்ட மஇகா தேர்தல்கள் அனைத்தும் செல்லாது என அறிவித்திருப்பதால் நீதிமன்றத்தில் ஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்து சட்டரீதியாக அதற்கு விளக்கம் கேட்டிருக்கிறார். அது அவர்களின் உரிமை. அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்றும் பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாலகிருஷ்ணன் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“மஇகா-வில் அனைத்து நிலைகளுக்கும் மறுதேர்தல் நடத்த வேண்டும் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி பழனிவேல் அறிவித்த போது, அதற்கு மறுநாள் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமீடி அதை வரவேற்றார்.”

“இந்நிலையில், ஆர்ஓஎஸ் கடந்த 2013-ம் ஆண்டு தேர்தல் செல்லாது என்று கூறி, தனது வரம்புகளை மீறி 2009-ம் ஆண்டு மத்திய செயற்குழுவை இடைக்கால மத்திய செயலவைக்கு நியமனம் செய்தது. அதன் காரணமாக பல பிரச்சனைகள் ஏற்பட்டன. பிப்ரவரி 13-ம் தேதி சட்டவிரோதமாக நடைபெற்ற இடைக்கால மத்திய செயலவையில் ஆர்ஓஎஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆனால் அது குறித்து அப்போது சாஹிட் கருத்து எதுவும் கூறவில்லை.”

“மஇகா விவகாரத்தில் காணப்பட்ட உடன்பாட்டை தேசிய துணைத்தலைவர் இரத்து செய்தது பற்றியும் எதுவும் பேசாத சாஹிட், தேசியத் தலைவரை மட்டும் குறி வைத்து விமர்சிப்பது ஏன்?” இவ்வாறு பாலகிருஷ்ணன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.