Home கலை உலகம் பிரபல இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான ஏ. வின்சென்ட் மறைவு!

பிரபல இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான ஏ. வின்சென்ட் மறைவு!

680
0
SHARE
Ad

s4-600x300சென்னை, பிப்ரவரி 26 – பிரபல இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான ஏ. வின்சென்ட் இன்று காலமானார். அவருக்கு வயது 83. எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா நடித்த ’அடிமைப்பெண்’ உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தமிழ்த்திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.

மேலும், இவர் மலையாளத் திரைப்படங்கள் பலவற்றை இயக்கியதோடு,  தெலுங்கு,  இந்தி திரைப்படங்களில் வெற்றிகரமான ஒளிப்பதிவாளராக விளங்கியவர்.

1928-ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த இவர், 1953-ஆம் ஆண்டு ‘சண்டி ராணி’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையலகிற்கு அறிமுகமானார்.

#TamilSchoolmychoice

ஆரம்ப காலங்களில் தமிழ்ப்படங்களில் பணியாற்றியவர். பிரபல இயக்குனர் ஸ்ரீதரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக விளங்கிய வின்சென்ட்,  ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’,  ‘சுமைதாங்கி’ போன்ற படங்கள் பெரிதும் பாராட்டைப்பெற்றவை.

A-vincentஇரு மொழிகளிலும் நுாற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த வின்சென்ட், சுமார் 30 படங்களை இயக்கியுள்ளார். 1974-ல் இவர் பிரேம்நகர் என்ற திரைப்படத்திற்கு அந்த ஆண்டின் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதைப் பெற்றார்.

இறுதியாக கடந்த 1997-ஆம் ஆண்டு ‘அன்னமய்யா’ என்ற படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். பின்னர் முதுமை காரணமாக திரையுலகிலிருந்து விலகியிருந்தார்.

இதனிடையே உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சையிலிருந்த வின்சென்ட் இன்று காலை மரணமடைந்தார். மறைந்த வின்செட்டுக்கு ஜெயனன் வின்சென்ட், அஜயன் வின்சென்ட் என்ற இரு மகன்கள் உள்ளனர்.