Home உலகம் சோனியைத் தொடர்ந்து லெனோவொ இணையதளத்திலும் ஹேக்கர்கள் கைவரிசை!

சோனியைத் தொடர்ந்து லெனோவொ இணையதளத்திலும் ஹேக்கர்கள் கைவரிசை!

494
0
SHARE
Ad

hackerலண்டன், பிப்ரவரி 27 – ‘லிசார்ட் ஸ்குவாட்’ (Lizard-Squad) இந்த வார்த்தை சமீபத்தில் பெரும்  நிறுவனங்களால் அச்சத்துடன் கவனிக்கப்பட்ட ஒன்று.

சோனி மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற தொழில்நுட்ப முன்னோடிகளின் இணையதளம் முற்றிலும் முடங்கிப்போனதற்கு இந்த லிசார்ட் ஸ்குவாட் ஹேக்கர்கள் தான் முக்கியக் காரணம்.

இவர்கள் தற்போது ‘லெனோவொ’ (Lenovo)  நிறுவனத்தின் இணையதளத்தில் தங்கள் கைவரிசையை காட்டி உள்ளனர். லெனோவொ இணையதளத்தின் வழக்கமான பேஸ்புக் பக்கத்தில் அத்துமீறி நுழைந்த ஹேக்கர்கள்,

#TamilSchoolmychoice

அதில் ‘சூப்பர் பிஷ்’ (Superfish) என்ற வைரஸ் நிரலை நுழைத்துள்ளனர். இதனால் பல மணி நேரத்துக்கு அந்த இணையதளத்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் சில மணி நேரங்களில் அந்த இணையதளம் வழக்கம்போல இயங்க தொடங்கியது.

இது தொடர்பாக லிசார்ட் ஸ்குவாட் குழு டுவிட்டர் வழியாக வெளியிட்டுள்ள பதிவில், “எங்களால் அடைய முடியாத இடம் என்று எதுவும் இல்லை” என்று தெரிவித்துள்ளனர். எனினும், இது குறித்து லெனோவொ நிறுவனம் எவ்வித அதிகாரப்பூர்வமான தகவல்களையும் வெளியிடவில்லை.