Home உலகம் ஐஎஸ் எதிர்ப்புப் படையில் இணைவது இந்தியாவின் தனித்த விருப்பம் – அமெரிக்கா! 

ஐஎஸ் எதிர்ப்புப் படையில் இணைவது இந்தியாவின் தனித்த விருப்பம் – அமெரிக்கா! 

499
0
SHARE
Ad

india-button-flag-mapநியூயார்க், பிப்ரவரி 28 – ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு எதிராக போரிட்டு வரும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையில் இணைவது இந்தியாவின் தனிப்பட்ட விருப்பத்தைப் பொருத்தது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை இணையமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வால் கூறியதாவது:- “தீவிரவாதத்திற்கு எதிராக, குறிப்பாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை எதிர்கொள்வதற்காக, அமெரிக்கா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுப் படையில் இந்தியா இணைவது குறித்து அந்நாடுதான் முடிவெடுக்க வேண்டும்”.

“பயங்கரவாத விவகாரத்தில் இந்தியா கூட்டுப் படையில் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் சரி, அல்லது வேறு வழியில் செயல்பட்டாலும் சரி, அதற்கு அமெரிக்கா முழு ஒத்துழைப்பு வழங்கும். அவர்களின் தனிப்பட்ட விருப்பத்தில் அமெரிக்கா தலையிடாது”

#TamilSchoolmychoice

“இந்தியாவிற்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான நல்லுறவு நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் விவகாரத்திலும் இந்த நல்லுறவு தொடரும்” என்று அவர் கூறியுள்ளார்.