Home நாடு இந்தியாவிற்கு செல்பவர்களுக்கு பறவைக் காய்ச்சல் தடுப்பு ஊசி!

இந்தியாவிற்கு செல்பவர்களுக்கு பறவைக் காய்ச்சல் தடுப்பு ஊசி!

578
0
SHARE
Ad

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????கோலாலம்பூர், மார்ச் 2 – இந்தியாவிற்கு பயணம் செய்பவர்கள் எச்1என்1 எனப்படும் பறவைக் காய்ச்சலுக்கான தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா அறிவுறுத்தியுள்ளார்.

சுவாசப்பை, இருதயம், சிறுநீரகம் தொடர்பான நோய் உள்ளவர்களும், சிறு பிள்ளைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோர் இந்த தடுப்பு ஊசியை கண்டிப்பாகப் போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் நூர் ஹிஷாம் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் மருத்துவமனைகளில் இந்த தடுப்பு ஊசி மருந்தை பெற முடியும் என்றும், காய்ச்சல், சளி, தொண்டை கரகரப்பு, இருமல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் விரைந்து சிகிச்சை பெற வேண்டும் என்றும் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தற்போது இந்தியாவில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதால் முன்னெச்சரிக்கையாக நாட்டின் சுகாதாரத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.