Home கலை உலகம் சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’ 40 கோடிக்கு விலை போனது!

சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’ 40 கோடிக்கு விலை போனது!

602
0
SHARE
Ad

Rajini-Murugan-Shooting-Spot-Stills-8சென்னை, மார்ச் 3 – துறை செந்தில் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் , ஸ்ரீதிவ்யா, பிரபு, இமான் அண்ணாச்சி, மனோபாலா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 27-ம் தேதி வெளியான படம் ‘காக்கி சட்டை’ . படத்திற்கு இசை அனிருத்.

சிவகார்த்திகேயன் அடுத்த படம் என்ன என ஒரு தரப்பு கேட்டு வந்த நிலையில், ‘காக்கி சட்டை’ படம் குறித்து மற்றொரு தரப்பு பழைய கதைதான், அதே பாணி ஆக்‌ஷன், காமெடி என இரண்டிலும் சற்று அரைகுறை என்பது போல் கலவையான விமர்சனங்கள் காக்கி சட்டை படம் சந்தித்து வருகிறது.

சரி இப்படம் வசூலில் எப்படி என விசாரித்தபோது, நடந்துவரும் கிரிக்கெட் உலக கோப்பை போடிகள் காரணமாக சற்று மந்த நிலை நிலவிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’ என்ற புதியப் படத்தில் நடித்து வருகிறார்.

#TamilSchoolmychoice

என்னதான் ‘காக்கி சட்டை’ படம், கலவையான விமர்சனங்களையும், வசூலில் மந்த நிலையும் இருந்தாலும் சிவகார்த்திகேயனின் அடுத்தபடமான ‘ரஜினி முருகன்’ படம் ரூ.40 கோடிக்கு மேல் விலை போனதாக தற்போது தவல்கள் வெளியாகியுள்ளது.