கோலாலம்பூர், மார்ச் 3 – மலேசியாவில் கடன் அட்டைகளின் (கிரடிட் கார்டு) மூலம் வருமான வரி செலுத்தும் புதிய திட்டம் அமலுக்கு வந்துள்ளது.
இது குறித்து நிதித்துறை துணை அமைச்சர் டத்தோ அகமட் மஸ்லான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் தங்களது வருமான வரியை சுலபமாகவும், விரைவாகவும் செலுத்த மலாயன் வங்கியின் துணையுடன் இந்த புதிய முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த புதிய வசதியை மலேசிய வருமான வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான http://www.hasil.gov.my/ மூலமாகவும் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.