Home உலகம் மனித உரிமை மீறல் விசாரணைக்கு தயார் – சரத்பொன்சேகா அறிவிப்பு!

மனித உரிமை மீறல் விசாரணைக்கு தயார் – சரத்பொன்சேகா அறிவிப்பு!

671
0
SHARE
Ad

sarath-fonsekaகொழும்பு, மார்ச் 6 – இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிகட்ட போரின் போது இலங்கை இராணுவம், பல்வேறு மனித உரிமை மீறல்களை இராஜபக்சே உத்தரவின் பேரில் செய்ததாக உலக நாடுகள் குற்றம் சாட்டி உள்ளன.

இந்நிலையில், இதுதொடர்பான உள்நாட்டு விசாரணைக்கு தயார் என இலங்கை முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பொன்சேகா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

“இறுதிகட்ட போரின் போது மனித உரிமை மீறல் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து உள்நாட்டு விசாரணை நடத்தினால் அதை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். இலங்கை இராணுவத்தில் 2 லட்சம் வீரர்கள் உள்ளனர். அவர்களில் யாராவது தவறுகள் செய்திருக்கலாம்”.

#TamilSchoolmychoice

“அப்படி தவறு செய்திருந்தால் விசாரணை நடத்தி அவர்களை தண்டிப்பது சரியானதே. இராணுவத்திற்கு எதிரான எத்தகைய விசாரணையையும் சந்திக்க நான் தயங்க மாட்டேன். எதை வேண்டுமானாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கின்றேன்” என்று அவர் கூறியுள்ளார்.

எனினும், சரத்பொன்சேகா உள்நாட்டு விசாரணைக்கே தாயாராக இருப்பதாக கூறியுள்ளார். ஐ.நா. விசாரணை குறித்து வாய் திறக்க மறுப்பதால், போர் குற்றம் குறித்த அவரின் அச்சம் வெளிப்படுகிறது என தமிழ் பத்திரிக்கைகள் விமர்சித்து வருகின்றன.