Home கலை உலகம் ‘ஆடுகளம்’ படத்தொகுப்பாளர் கிஷோர் மரணம்!

‘ஆடுகளம்’ படத்தொகுப்பாளர் கிஷோர் மரணம்!

523
0
SHARE
Ad

3819c2dசென்னை, மார்ச் 6 – மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த படத்தொகுப்பாளர் கிஷோர் (வயது 36) சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார்.

‘ஆடுகளம்’ படத்துக்காக சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருது பெற்ற கிஷோர், ஈரம், ஆடுகளம், பயணம், எங்கேயும் எப்போதும், காஞ்சனா, தோனி, ஆரோகணம், பரதேசி, எதிர்நீச்சல், வானவராயன் வல்லவராயன், உதயம் என்எச் 4, நெடுஞ்சாலை, உன் சமையலறையில் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட படங்களுக்கு சிறந்த படத்தொகுப்பு செய்துள்ளார்.

‘விசாரணை’ படத்தின்மூலம் மீண்டும் இயக்குனர் வெற்றிமாறனுடன் பணியாற்றிக் கொண்டிருந்த இவர், அண்மையில் படத்தொகுப்பு பணிகளை கவனித்துக்கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி விழுந்தார்.

#TamilSchoolmychoice

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவினால் நினைவு இழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு உயிரைக் காப்பாற்ற முயற்சி செய்த போதும், அவர் கடந்த சில நாட்களாக சுய நினைவு திரும்பாமலேயே இருந்தார்.

இந்நிலையில், அவர் இறந்துவிட்டதாக தற்போது நிகில் முருகன் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிஷோருக்கு இன்னும் மூன்று மாதங்களில் திருமணம் நடக்கவிருந்ததாகக் கூறப்படுகின்றது.

கிஷோரின் அகால மரணம் குறித்து திரையுலகத்தினர் தற்போது நட்பு ஊடகங்களின் வாயிலாக தங்களது வருத்தத்தையும், அனுதாபங்களையும் தெரிவித்து வருகின்றனர்.