Home இந்தியா ‘இந்தியாவின் மகள்’ ஆவணப் படம் – பிபிசி-க்கு எதிராக இந்திய அரசு!

‘இந்தியாவின் மகள்’ ஆவணப் படம் – பிபிசி-க்கு எதிராக இந்திய அரசு!

622
0
SHARE
Ad

bbc-newsபுதுடெல்லி, மார்ச் 6 – இந்தியாவை உலுக்கிய டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழிப்பு வழக்கின் குற்றவாளி முகேஷ் சிங்கின் பேட்டி அடங்கிய ‘இந்தியாவின் மகள்’ ஆவணப்படத்தை வணிக நோக்கத்திற்காக பிபிசி பயன்படுத்தியதாக கூறி இந்திய உள்துறை அமைச்சகம் சட்டரீதியிலான நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், இது தொடர்பாக பிபிசி நிர்வாக குழுவிற்கு நீதிமன்ற நோட்டீஸ் ஒன்றையும் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக இந்திய அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில்,

“படத்தை இயக்கிய லெஸ்டி உட்வின், வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப் படமாட்டாது என்ற ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருந்தார். ஆனால் பிபிசிக்கு இதனை ஒளிபரப்ப முழு உரிமையையும் விற்றுள்ளார். பிபிசி ஆவணப்படத்தை வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கு தேவையான அனுமதிகளை பெறவில்லை.”

#TamilSchoolmychoice

nirbhaya-2-650_030615032527“இதனால், அந்நிறுவனத்தின் நிர்வாகக் குழுவிற்கு சட்ட ரீதியிலான நோட்டீஸ் அனுப்பியுள்ளோம், அவர்கள் பதிலுக்காகக் காத்திருக்கிறோம். இது தொடர்பாக விரைவில் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், யூ-டியூபில் இருந்து இந்த ஆவணப்படத்தை நீக்க இந்திய அரசு முயற்சித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கு இடையே ஆவணப் படத்தை தடை செய்ததற்காக பல்வேறு விமர்சகர்கள் இந்திய அரசை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.