Home நாடு “அரசுக்கு எதிராக தடையுத்தரவு – அமைச்சரை பிரதிவாதியாக சேர்த்தது – எல்லாமே கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய...

“அரசுக்கு எதிராக தடையுத்தரவு – அமைச்சரை பிரதிவாதியாக சேர்த்தது – எல்லாமே கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயல்” – பெரு.அ.தமிழ்மணி கண்ணோட்டம்!

890
0
SHARE
Ad

கோலாலம்பூர், மார்ச் 6 –(மஇகா நீதிமன்ற வழக்கின்  நிலவரங்கள் குறித்து, மூத்த பத்திரிக்கையாளரும், அரசியல் ஆய்வாளரும், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவருமான பெரு.அ.தமிழ்மணி எழுதியுள்ள கண்ணோட்டம்)

Tamil Maniஉள்துறை அமைச்சின். கீழ் இயங்கி வரும் சங்கங்களின் பதிவு இலாகா மீது சீராய்வு மனு (Judicial Review) என்ற போர்வையில் வழக்கை தாக்கல் செய்துள்ள டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தானொரு அமைச்சர் என்ற நிலையையும் எண்ணிப்பாராமல் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிட்டை வழக்கில் ஒரு பிரதிவாதியாக சேர்த்ததோடு மட்டுமல்லாமல் அரசாங்கத்திற்கு எதிராக தடை ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த மனு சீராய்வு மீதான சட்ட நிர்ணயங்களுக்கு முரணாகயிருப்பதால் வரும் 9ஆம் திகதி நீதிபதியால் இந்த வழக்கு தள்ளுபடியாக சாத்தியம் இருப்பதால், பழனி இம்மனுவை மீட்டுக்கொள்ளவுள்ளார் என்று தெரிகிறது.

#TamilSchoolmychoice

Ahmad Zahid Hamidiஇவருடன் மேலும் மூவர் டத்தோ சோதிநாதன், டத்தோ பாலகிருஷ்ணன் ஏ.பிரகாஷ் ராவ் ஆகியோரும் இதேபோன்ற அடிப்படையில். மனுவைத் தாக்கல் செய்திருப்பதால் அவர்களின் மனுக்களும் தள்ளுபடியாக சாத்தியம் இருக்கிறது. அதனால் இம்மூவரும் மனுவை திரும்பப் பெறுவார்கள் என்றும்  எதிர்பார்ககப்படுகிறது.

இந்த நால்வரைப்போலவே ஏ.கே.இராமலிங்கமும் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் .இம்மனு மட்டுமே சீராய்வுக்கு எடுத்துக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது .அம்மனு மட்டுமே 9 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது. இம்மனுவுக்கு மட்டுமே சட்டத்துறையும், சங்கங்களின் பதிவு இலாகாவும் பதில் சொல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே கட்சியின் தலைவர் என்ற முறையில் பழனி பதிவு செய்துள்ள மனுவுக்கான அனுமதியை ம இ கா மத்திய செயலவையிடம் பெறவில்லை என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது. இதேபோன்ற நிலைப்பாட்டில்தான் மேலும் மூவரின் மனுக்களும் அடங்கியுள்ளன.

அம்னோவின் கோபத்திற்கு ஆளாவார்களா?

bn logo.jpg-795166பாரிசான் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம இ காவின் தலைவரான பழனி ,அம்னோவின் முக்கியத் தலைவர் ஒருவரும் அமைச்சருமான ஒருவர் மீது வழக்கு தொடுப்பதும், அதேவேளை ஓர் அமைச்சரே அரசாங்கத்தின் இலாகா ஒன்றிற்கு எதிராக தடை விதிக்கக் கோருவதும் இதுவரை பின்பற்றப்பட்டு வந்த சில நல்ல மரபுகளை மீறுவதோடு மட்டுமல்ல!

அரசின் விதி முறைகளுக்கு அது முரணாகவும் இருக்கிறது. அதேவேளை ஒரு சீராய்வு மனுவை எப்படி தாக்கல் செய்வது என்பது கூடத் தெரியாமல் வரும் 9ஆம் திகதி தாங்கள் போட்ட மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதையெல்லாம் பார்த்தால் பழனியின் நடவடிக்கை வேடிக்கையாகவும் நையாண்டித்தனமாகவும் இருப்பதைக் கணிக்க முடிகிறது.

மத்திய செயலவையின் நடவடிக்கை என்ன?

K.Ramalingam MIC Batuஎனவே ஏ.கே.இராமலிங்கம் (படம்) மட்டும் தாக்கல் செய்துள்ள மனுவில் 2013ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமது நிலைப்பாடு சட்டப்படி சரியானது என்கிற உத்தரவை அறிவிக்க கோருகிறார்.

அதனால் அத்தேர்தல் செல்லுமா அல்லது செல்லாதா? என்று அறிவிக்க சங்கப் பதிவகத்திற்கு அதிகாரம் இல்லை என்பதற்கான பதிலைப்  பெறுவதற்குத்தான் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அவரின் மனுவில் பிரதிவாதியாக ஆர்.ஓ.எஸ்  என்ற சங்கப் பதிவகம் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற நால்வரின் மனுவில் உள்துறை அமைச்சர் பெயரும் அரசாங்கமும் சேர்க்கப்பட்டது தவறானது என்று சுட்டிக்காட்டிய பிறகு அந்த மனுவையே திரும்பப் பெறுதல் என்பது சட்ட முரண்பாடாகும்.

அதனால் பழனி, சோதி, பாலா, பிரகா‌ஷ்  ஆகிய நால்வரும். ம இ.கா.மத்திய செயலவையின் விசாரணையில் இருந்து தப்பமுடியாது. சீராய்வு மனு என்ற பெயரில் அம்னோ, பாரிசான், அரசாங்கம், அமைச்சர் என்ற நான்கு நிலைப்பாடுகளில். நல் உறவையும் நல்லெண்ணத்தையும், புரிந்துணர்வையும் சீர்குலைத்த குற்றத்திற்காகவும், அதேவேளை ம இ கா வின் நற்பெயருக்கு கேடு விளைவித்ததற்காகவும் ஒழுங்கு நடவடிக்கைக்கு அவர்களை உட்படுத்த முடியும்.

எனவே, கட்சியின் தலைவரே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் டாக்டர் சுப்ரா தலைமையில் விரைந்து மத்திய செயலவையை கூட்டப்படலாம் என்றும், ஒரு சுயேச்சையான விசாரணை குழுவை நியமித்து நால்வரையும் விசாரணைக்கு உட்படுத்துவதே சிறந்த. அணுகுமுறையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

-பெரு.அ.தமிழ்மணி

(பின்குறிப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் கட்டுரையாளர் பெரு.அ.தமிழ்மணியின் சொந்த, தனிப்பட்ட கருத்துகளாகும். அந்தக் கருத்துகள் செல்லியலின் கருத்துகளோ, செல்லியலைப் பிரதிபலிக்கும் கருத்துகளோ அல்ல. கட்டுரையாளரின் கருத்துகளுக்கு செல்லியல் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது.)

தமிழ்மணியின் மற்ற எழுத்துப் படிவங்களை maravan madal tamil mani என்ற முகநூல் (பேஸ்புக்)  அகப்பக்கத்தில் காணலாம். கட்டுரையாளரைப் பின்வரும் இணைய முகவரியில் தொடர்பு கொள்ளலாம்: 

wrrcentre@gmail.com