Home இந்தியா ஜெயலலிதா வழக்கு: தீர்ப்பு தேதி நாளை மறுநாள் அறிவிப்பு!

ஜெயலலிதா வழக்கு: தீர்ப்பு தேதி நாளை மறுநாள் அறிவிப்பு!

349
0
SHARE
Ad

JEYAபெங்களூரு, மார்ச் 7 – ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்துள்ள சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீது கடந்த 38 நாட்களாக நடந்து வந்த விசாரணை நேற்று நிறைவடைந்தது.

வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கும் தேதி நாளை மறுநாள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்பட நான்கு பேர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன் நேற்று விசாரணை நடந்தது.

அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங் தனது இறுதி வாதத்தை தொடங்கினார். குற்றவாளிகள் வருமானத்திற்கு அதிகம் சொத்து சேர்த்துள்ளதை அரசு தரப்பில் தனி நீதிமன்றத்தில் உரிய, சாட்சி ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளோம் என்றார்.

#TamilSchoolmychoice

நேற்று இறுதி வாதம் முடித்த அரசு வழக்கறிஞர் பவானிசிங், சுமார் 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட எழுத்துப்பூர்வமான ஆவணங்களை  தாக்கல் செய்தார். அதை பார்த்த நீதிபதி இவ்வளவு ஆவணங்களா? என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

அதற்கு பவானிசிங், குற்றவாளிகள் தரப்பில் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதில் கொடுப்பது எனது கடமை. வாதம் செய்தபோது மறந்துவிட்ட சில தகவல்கள் உள்பட குற்றவாளிகள் தரப்பு வாதத்திற்கு பதில் கொடுக்க இது அவசியம் என்றார்.

அதைத் தொடர்ந்து சுப்ரமணிய சுவாமி எப்போது எழுத்து பூர்வமான ஆவணம் தாக்கல் செய்கிறார் என்று நீதிபதி கேட்டதற்கு மார்ச் 9-ஆம் தேதி என்று பதிலளித்தார். பின் தி.மு.க மனு என்னவானது என்ற நீதிபதியின் கேள்விக்கு அம்மனுவும் உச்சநீதிமன்றத்தில் மார்ச் 9-ஆம் தேதி விசாரணைக்கு வருவதாக தெரிவித்தார்.

இதனால், நாளை மறுநாள் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஜெயலலிதா உள்பட நான்கு பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த ஜனவரி 5-ஆம் தேதி முதல் நேற்று வரை 38 நாட்கள் நடந்தது.

ஜெயலலிதா, சார்பில் வழக்கறிஞர் நாகேஷ்வரராவ் 9 நாட்களும், சசிகலா தரப்பில் வக்கீல் பசந்த் 9 நாட்களும், சுதாகரன், இளவரசி சார்பில் வக்கீல் சுதந்திரம் 8 நாட்களும், அரசு தரப்பில் பவானிசிங் 7 நாட்கள் வாதம் செய்தனர்.