Home தொழில் நுட்பம் பேஸ்புக் தானியங்கி கார் வருமா? – மார்க் சக்கர்பெர்க் பதில்!  

பேஸ்புக் தானியங்கி கார் வருமா? – மார்க் சக்கர்பெர்க் பதில்!  

536
0
SHARE
Ad

Mark Zuckerbergபார்சிலோனா, மார்ச் 10 – தானியங்கி மின்சாரக் கார்களை மென்பொருள் தொழில்நுட்பத்தின் உதவியுன் கூகுள், ஆப்பிள் போன்ற முன்னணி நிறுவனங்கள் தாயாரித்து வரும் நிலையில், புகழ்பெற்ற நட்பு ஊடகமான பேஸ்புக், இந்த திட்டத்தில் களமிறங்குமா என்ற கேள்விக்கு பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் சுவாரசியமான பதில் ஒன்றை தெரிவித்துள்ளார்.

பார்சிலோனா நகரில் நடைபெற்ற செல்பேசி முதலீட்டாளர்கள் மாநாட்டில் கேள்வி நேரம் ஒன்றில் மார்க் சக்கர்பெர்க்கிடம் மேற்கூறிய கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-

“உலக அளவில் மற்ற முன்னணி நிறுவனங்களைப் போல் பேஸ்புக்கும் மக்களுக்கு பயனுள்ளவைகளை உருவாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் தானியங்கி கார்கள் தயாரிக்கும் எண்ணம் தற்போது இல்லை. எங்களது கவனம் முழுவதும் உலக அளவில் இருக்கும் மக்களை ஒன்றிணைப்பதே ஆகும். அதற்கான பல்வேறு பரிசோதனை முயற்சிகளில் நாங்கள் இறங்கி உள்ளோம்.”

#TamilSchoolmychoice

“இதற்கு என நாங்கள் உருவாக்கி இருக்கும் ‘இண்டர்நெட்.ஆர்க்’ (Internet.org) திட்டத்தின் மூலம் உலக நாடுகளை ஒன்றிணைப்பதும், ‘மெய்-நிகர்’ (virtual-reality) தொழில்நுட்பத்தின் மூலம் பல்வேறு ஆக்கப்பூர்வமான பயன்பாடுகளை உருவாக்குவதிலும் தான் நாங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றோம்” என்று கூறியுள்ளார்.