Home நாடு நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்தால் நடவடிக்கை – புதிய தீர்மானம்!

நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்தால் நடவடிக்கை – புதிய தீர்மானம்!

623
0
SHARE
Ad

21730675கோலாலம்பூர், மார்ச் 10 – அரசியல் கைதியான எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் அனுமதிக்க மறுத்ததற்காக , எதிர்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 15 பேர் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே  மொட்டையடித்துக் கொண்டனர்.

இதனால், நாடாளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டு உடனடியாக அங்கு ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதாவது, நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், வேண்டாத செயல்களில் ஈடுபடுவோர் (மொட்டை அடிப்பது உட்பட) மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்காருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

பாஸ் கட்சியைச் சேர்ந்த டத்தோ டாக்டர் நிக் மசியான் நிக் முகமட், ஜசெக- வை சேர்ந்த ஜிம்மி வோங், பிகேஆர் கட்சியைச் சேர்ந்த லீ கை லூன், லீ சியான் சுங் மற்றும் டான் கார் ஹிங் ஆகிய எதிர்கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களும் தங்களது எதிர்ப்பைக் காட்ட மொட்டையடிக்கும் செயல்களில் ஈடுபட்டனர்.