Home உலகம் ரியாலிட்டி ஷோ விபரீதம்: ஹெலிகாப்டர் விபத்தில் பிரபலங்கள் உட்பட10 பேர் பலி!

ரியாலிட்டி ஷோ விபரீதம்: ஹெலிகாப்டர் விபத்தில் பிரபலங்கள் உட்பட10 பேர் பலி!

980
0
SHARE
Ad

???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????பியோனஸ் ஏர்ஸ், மார்ச் 10 – அர்ஜென்டினாவில் தனியார் தொலைக்காட்சி நடத்திய எதார்த்த நிகழ்ச்சி (Reality show) ஒன்றில், இரு ஹெலிகாப்டர்கள் மோதி, பிரபலங்கள் உட்பட 10 பேர் பலியாகினர். இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பில், ஹெலிகாப்டரில் பறந்த படியே போட்டியாளர்கள் தரையில் இருக்கும் தங்களது தங்குமிடம் மற்றும் உணவு பொருட்களைப்  படம் பிடிக்க வேண்டும் என்று இரு அணிகளுக்கிடையே போட்டி நடைபெற்றது.

அர்ஜென்டினாவில் வடமேற்கில் உள்ள லாரி ரியோஜா மாகாணத்தின்  மலைப்பகுதியில் நடபெற்ற இப்போட்டியின் படப்பிடிப்பில் பிரான்ஸ் நாட்டின் விளையாட்டு வீரர்கள் உள்பட 8 பேர் கலந்து கொண்டனர்.இவர்கள் 2 ஹெலிகாப்டர்களில் பயணம் செய்தனர்.

#TamilSchoolmychoice

இவர்களது ஹெலிகாப்டர்கள் வில்லா கேஸ்டெல்லி என்ற இடத்தில் சென்ற போது 2 ஹெலிகாப்டர்களும் ஒன்றையொன்று மோதி விபத்துக்குள்ளாகின.

இதனால் தரையில் விழுந்து அவை நொறுங்கின. இந்த விபத்தில் 2 விமானிகள் உள்பட 10 பேர் பலியாகினர்.

அவர்களில் 3 பேர் பிரான்சின் பிரபலமான விளையாட்டு வீரர்கள். புளோரன்ஸ் ஆர்தாயுட் பாய்மர படகு வீராங்கனை ஒருவரும் ஆவார். மற்றொருவர் காமில் முபாத். இவர் ஒலிம்பிக் நீச்சல் வீரர்.

இன்னொருவர் அலெசிஸ் வாஸ்டின். ஓலிம்பிக் குத்துச்சண்டை வீரர். இவர்கள் தவிர மேலும் 5 பேர் பிரான்சை சேர்ந்தவர்கள். இந்த தகவலை பிரான்ஸ் அதிபர் பிரான்கோயில் ஹோலண்டே உறுதி செய்தார்.

விபத்தில் பலியான நீச்சல் வீரர் காமில் முபாத் 2012–ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 3 பதக்கம் வென்றவர். அலெசிஸ் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.