நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த மாமன்னரை அமைச்சரவை உறுப்பினர்கள் வரவேற்றனர்.
முன்னதாக நாடாளுமன்றக் கட்டிடத்தில் உள்ள விருந்தினர் அறையில் மாமன்னருக்கு அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார்.
அரச மலாய் படையில் வெவ்வேறு பொறுப்புகளை வகிக்கும் 24 வீரர்கள் மற்றும் 3 அதிகாரிகள் அடங்கிய இந்த அணிவகுப்புக்கு மேஜர் அஸ்லான் ஷா பெஹரோம் தலைமை ஏற்றார்.
பின்னர் லெஃப்டினென்ட் நோர் அசிசான் யாயா தலைமையில் 40 பேர் கொண்ட இசைக்குழுவினர் மலேசியாவின் தேசிய கீதத்தை இசைத்தனர்.
இதையடுத்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க மாமன்னரும் அமைச்சரவை உறுப்பினர்களும் நாடாளுமன்றத்திற்குள் சென்றனர்.
நடப்பு கூட்டத்தொடர் ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.