Home இந்தியா பொருளாதார முன்னேற்றம் – 2024-ல் இருமடங்காகும் இந்திய பணக்காரர்களின் எண்ணிக்கை!

பொருளாதார முன்னேற்றம் – 2024-ல் இருமடங்காகும் இந்திய பணக்காரர்களின் எண்ணிக்கை!

1793
0
SHARE
Ad

downloadபுதுடெல்லி, மார்ச் 10 – இந்தியாவில் பொருளாதார முன்னேற்றம் ஆக்கப்பூர்வமான வழியில் சென்று கொண்டிருப்பதால், 2024-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை இருமடங்காகும் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட ‘நைட் ஃபிராங்க்’ (Knight Frank) எனும் பன்னாட்டு வர்த்தக நிறுவனம் கூறியிருப்பதாவது: “இந்திய பொருளாதாரம் ஆக்கப்பூர்வமான வழியில் சென்று கொண்டிருக்கிறது”.

“இது தொடர்ந்தால், இந்திய பணக்காரர்களின் எண்ணிக்கை 2024-ல் 104 சதவீதத்திற்கும் மேல் அதிகரிக்கும். தற்சமயம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் பெரும் பணம் ஈட்டியவர்களின் எண்ணிக்கை 1652.”

#TamilSchoolmychoice

“இவர்களை அதீத பணமதிப்புடைய தனி நபர் (ultra high net worth individuals) என்று பிரிக்கலாம். இவர்களின்  எண்ணிக்கை 2024-ல் 3,371 ஆக உயரும்” என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நைட் ஃபிராங்க் இந்தியாவின் தலைவர் ஷீர்ஷீர் பைஜால் கூறுகையில், “பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என்பது இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியை எதிரொலிக்கிறது.

“2014-ம் ஆண்டிற்கு பிறகு முதலீடுகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியும், இந்தியா ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட முன்னேற்றமும் இதற்கு மிக முக்கியக் காரணம். இதன் மூலம் ஆளும் இந்திய அரசு பொருளாதார நடவடிக்கைகளில் உலக அளவில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது”.

“இதனைப் பயன்படுத்தி அனைவரும் வெளிப்படையான பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டால் இந்தியா உலக அளவில் கணிக்க முடியாத உச்சத்தை எட்டும்”

“ஆனால், பெரும்பான்மையானோரிடத்தில் இருக்கும் மறைமுகமாக சொத்துக்குவிப்பும் எண்ணம் இந்தியாவிற்கு மிகப் பெரும் சவாலாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

இந்தியாவைப் பொருத்தவரையில் பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக மும்பை உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் டெல்லி மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்கள் உள்ளன.