Home இந்தியா அயர்லாந்தை வெற்றி கொண்டு உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இந்தியா  தொடர் சாதனை

அயர்லாந்தை வெற்றி கொண்டு உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இந்தியா  தொடர் சாதனை

633
0
SHARE
Ad

ஹாமில்டன் (நியூசிலாந்து) மார்ச் 10 – உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ”பி” பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது 5 வது ஆட்டத்தில் இன்று  அயர்லாந்தை வெற்றி கொண்டதன் மூலம் தொடர்ந்து இதுவரை விளையாடிய எல்லா ஆட்டங்களிலும் வெற்றி கொண்டு சாதனை புரிந்துள்ளது.

CRICKET World Cup 2015 Ind v S Africa

முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 49 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 36.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 260 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்  அயர்லாந்தை வீழ்த்தியது.

#TamilSchoolmychoice

இதன் மூலம் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ள இந்தியா பி பிரிவிலும் முதலிடம் வகிக்கிறது. இந்த நிலையில், அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும்  பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இந்திய அணி  பல சாதனைகளை நிகழ்த்தி உள்ளது.