கோலாலம்பூர், மார்ச் 14 – கணினித் தமிழ் ஆர்வர்களால் உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் “இணை மதியம்” – தமிழ் தொழில் நுட்ப விழா இன்று மாலை சரியாக 7.30 மணிக்கு, கோலாலம்பூர் பிரிக்பீல்ட்சில் உள்ள நுண்கலைக் கோயில் மண்டபத்தில் தொடங்கியது.
திரளான மக்கள் கலந்து கொண்டுள்ள இந்த நிகழ்வில் துணை கல்வி அமைச்சர் ப.கமலநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார்.
முரசு அஞ்சல் மென்பொருளின் 30ஆம் ஆண்டு நிறைவு விழாக் கொணாட்டமாக நடைபெறும் இந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற நிகழ்வில் செல்லினம், செல்லியல் ஆகிய தளங்களின் புதிய தொழில் நுட்ப மேம்பாடுகளும் அறிமுகம் காண்கின்றன.