Home கலை உலகம் ‘புறம்போக்கு’ படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியீடு – படக்குழுவினர் அதிர்ச்சி!

‘புறம்போக்கு’ படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியீடு – படக்குழுவினர் அதிர்ச்சி!

647
0
SHARE
Ad

puramசென்னை, மார்ச் 16 – எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘புறம்போக்கு’. ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நடிக்கும் இப்படத்தை ஜனநாதனின் ‘பைனரி பிக்சர்ஸ்’ நிறுவனம், ‘யுடிவி’ நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.

படத்திற்கு இசை வாசன். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த வாரத்தில் இப்படத்தின் பாடல்களை வெளியிட திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், படத்தின் பாடல்கள் திடீரென இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதையறிந்த படக்குழுவினர் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக இதை தடுப்பதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

#TamilSchoolmychoice

இப்படத்தின் இசை உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தின் பாடல்கள் யார் மூலமாக வெளியாகியிருக்கும் என தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறதாம்.