Home நாடு மஇகா வழக்கு: மார்ச் 20-ம் தேதி ஆட்சேப மனு மீதான தீர்ப்பு!

மஇகா வழக்கு: மார்ச் 20-ம் தேதி ஆட்சேப மனு மீதான தீர்ப்பு!

488
0
SHARE
Ad

கோலாலம்பூர் உயர் நீதிமன்றம்கோலாலம்பூர், மார்ச் 16 –  மஇகா-சங்கப் பதிவகம் இடையிலான வழக்கில், முன்னாள் இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் (படம்) தன்னை மூன்றாவது தரப்பாக (Intervener) வழக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என சமர்ப்பித்திருந்த விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு இன்று காலை அவருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதனைத் தொடர்ந்து, சங்கப் பதிவகத்திற்கு எதிரான வழக்கில் அரசாங்க தரப்பு வழக்கறிஞர் தொடக்க நிலை ஆட்சேபங்களை சமர்ப்பித்தார். அரசாங்க வழக்கறிஞரின் அந்த ஆட்சேப மனு மீதான விவாதங்கள் இன்று மாலை வரை தொடர்ந்தன.

இந்நிலையில், அரசாங்க தரப்பு வழக்கறிஞரின் ஆட்சேபங்கள் குறித்த தனது தீர்ப்பை வரும் மார்ச் 20-ம் தேதி வெள்ளிக்கிழமை அறிவிப்பதாக நீதிபதி கூறியுள்ளார்.