இலங்கை அணியில் அதிகபட்சமாக சங்ககாரா 45 ரன்களும் திரிமன்னே 41 ரன்களும் சேர்த்தனர். ஏடி மேத்யூஸ் 19 ரன்களை எடுத்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கங்களில் மட்டுமே ரன்களை எடுத்தனர்.
இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் பந்து வீச்சாளர் டுமினி 3 விக்கெட்களையும், இம்ரான் தஹிர் 4 விக்கெட்களையும் வீழ்த்தினர். 134 என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 18 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றிபெற்றது.
அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியையோ, நியூசிலாந்து அணியையோ தென்னாப்பிரிக்கா எதிர்கொள்ளும். 4 விக்கெட்களை வீழ்த்திய தென்னாப்பிரிக்காவின் இம்ரான் தஹீர் ஆட்ட நாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.