Home நாடு ஹூடுட் சட்ட மசோதா கிளந்தான் சட்டமன்றத்தில் தாக்கல்

ஹூடுட் சட்ட மசோதா கிளந்தான் சட்டமன்றத்தில் தாக்கல்

733
0
SHARE
Ad

கோத்தாபாரு, மார்ச் 18 – பக்காத்தான் கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி கிளந்தான் மாநில சட்டமன்றத்தில் ஹூடுட் சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது.
அம்மாநில மந்திரி பெசார் டத்தோ அகமட் யாகோப் (படம்) புதன்கிழமை காலை இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.

Kelantan MB Ahmad Yaacobஏழு முக்கிய குற்றங்களுக்கு அதிகப்படியான பிரம்படிகளை தண்டனையாக வழங்கக் கோரும் இந்த சட்டம் கிளந்தான் மாநிலத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது.

முஸ்லிம் அல்லாதவர்கள் விரும்பினாலும் கூட இச்சட்டம் அவர்களுக்குப் பொருந்தாது என்று அகமட் யாகோப் தெரிவித்தார். பக்காத்தான் கூட்டணிக் கட்சிகளின கடும் எதிர்ப்பையும் மீறி இச்சட்டம் தாக்கல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கிடையே கிளந்தான் அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்ட மசோதாவை நிராகரிக்க வேண்டும் எனக் கூறி கெராக்கான் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அக்கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் டான் கேங் லியாங் தலைமையிலான குழு இது தொடர்பான மனுவை கோத்தா பாரு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் ஹூடுட் சட்ட மசோதாவை தாக்கல் செய்திருப்பதன் மூலம் பக்காத்தான் கூட்டணியில் பிளவு ஏற்பட பாஸ் கட்சி வழிவகுத்துள்ளது என ஐசெக சாடியுள்ளது.
இந்த சட்ட மசோதாவை மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்திருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதாக ஐசெக தேசிய அமைப்புச் செயலாளர் அந்தோணி லோக் கூறியுள்ளார்.