Home வணிகம்/தொழில் நுட்பம் ஸ்பைஸ்ஜெட்டின் ஆறு விமானங்கள் ரத்தாகிறது!

ஸ்பைஸ்ஜெட்டின் ஆறு விமானங்கள் ரத்தாகிறது!

644
0
SHARE
Ad

SpiceJet-PRICEபுதுடெல்லி, மார்ச் 20 – ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் குத்தகைதாரர்களிடம் செலுத்த வேண்டிய குத்தகை பணம் நிலுவையில் உள்ளதால், அந்நிறுவனத்தின் 6 விமானங்களுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்யும்படி சிவில் விமான போக்குவரத்து ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மலிவு விலை விமான போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் ‘அவாஸ் அயர்லாந்து லிமிடெட்’ ( AWAS Ireland limited) மற்றும் ‘வில்மிங்டன் டிரஸ்ட் எஸ்பி சர்வீசஸ்’ (Wilmington Trust SP Services) ஆகிய இரு பன்னாட்டு நிறுவனங்களிடம் விமானங்களை குத்தகைக்கு பெற்றுள்ளது.

ஆனால், ஒப்பந்தப்படி பணம் செலுத்தாததால் தாங்கள் வழங்கிய விமானங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யும்படி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அந்த நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன.

#TamilSchoolmychoice

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ராஜீவ் ஷக்தர், அயர்லாந்து நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்த அடிப்படையில் பெற்ற 6 விமானங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யும்படி சிவில் விமான போக்குவரத்து ஆணையத்திற்கு நேற்று உத்தரவிட்டார்.

மேலும், அந்த விமானங்களை ஏற்றுமதி செய்வது தொடர்பான கோரிக்கைகள் மீது இரு வாரங்களில் விமான ஆணையம் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த தீர்ப்பையடுத்து, குத்தகை நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையை ஸ்பைஸ்ஜெட் தொடங்கியுள்ளது.

இதேபோல், அயர்லாந்தின் மற்றொரு நிறுவனம் ஸ்பைஸ்ஜெட்டிற்கு வழங்கிய 5 விமானங்களை ரத்து செய்யும்படி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றத்தின் மற்றொரு அமர்வு தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது.

ஸ்பைஸ்ஜெட்டில் பெரும்பான்மையான பங்குகளை வைத்து இருந்த சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன், தொடர் வர்த்தக சரிவின் காரணமாக தனது பங்குகளை மீண்டும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனர் அஜய் சிங்கிடம் ஒப்படைத்தார்.

அஜய் சிங்கின் பெரும் முயற்சியின் காரணமாக ஸ்பைஸ்ஜெட்டின் பங்குகள் சற்றே எழுச்சியை கண்டு வரும் இந்த தருணத்தில் உயர்நீதிமன்றம் வழங்கி உள்ள இந்த தீர்ப்பு, அந்நிறுவனத்திற்கு சற்றே தொய்வை ஏற்படுத்தி உள்ளது. எனினும், சமரச பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்புள்ளதால், விமானங்களின் ரத்து விவகாரத்தில் இருந்து அந்நிறுவனம் மீள வாய்ப்புள்ளது.