Home நாடு மே 15 முதல் கேடிஎம் கட்டணம் 7.10 ரிங்கிட் வரை உயர்வு!

மே 15 முதல் கேடிஎம் கட்டணம் 7.10 ரிங்கிட் வரை உயர்வு!

605
0
SHARE
Ad

KTMகோலாலம்பூர், மார்ச் 20 – எதிர்வரும் மே 15-ம் தேதி முதல், விரைவில் இரயில் சேவை கட்டணம் 7.10 ரிங்கிட் வரை உயர்வதாக கேடிஎம் பெர்ஹாட் நிறுவனம் நேற்று அறிவித்தது.

ஒரு இரயில் நிலையத்தில் இருந்து மற்றொரு இரயில் நிலையத்திற்கு செல்லும் தூரம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த கட்டணங்கள் அமையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பயண தூரத்தைப் பொறுத்து முன்கட்டண பயணச்சீட்டாளர்களுக்கு (stored value card) 20 சதவிகிதமும், வாராந்திர பயணச்சீட்டாளர்களுக்கு (weekly pass holders) 18-26 சதவிகிதமும், மாதாந்திர பயணச்சீட்டாளர்களுக்கு (monthly pass holders) 19-35 சதவிகிதமும் கட்டணக்கழிவு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதனிடையே, முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 4-12 வயதுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவிகித கட்டணக் கழிவு தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தரை பொது போக்குவரத்து ஆணையத்தின் அனுமதியுடன் இந்த கட்டண மாற்றங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்றும், இந்த புதிய கட்டணங்களுக்கு பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கிடையாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு கடந்த 2003-ம் ஆண்டு கேடிஎம் தனது கட்டணங்களில் மாற்றங்களைக் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.