Home உலகம் சூரிய சக்தி விமான வாரணாசியில் இருந்து மியான்மருக்கு பறந்தது!

சூரிய சக்தி விமான வாரணாசியில் இருந்து மியான்மருக்கு பறந்தது!

592
0
SHARE
Ad

Ground staff prepare to push the "Solar Impulse 2" into a hangar after it landed at the airport in Ahmedabadவாரணாசி, மார்ச் 20 – முழுக்க முழுக்க சூரிய ஒளியில் இயங்கும் விமானம், தனது உலக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்திய சுற்று பயணத்தை முடித்துக் கொண்டு மியான்மர் நாட்டை நோக்கி தனது அடுத்தகட்ட பயணத்தை தொடங்கியது.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பெர்ட்ரண்ட் பிக்கார்டு மற்றும் ஆண்ட்ரே போர்ஷ்பெர்க் ஆகிய இருவரும் வடிவமைத்துள்ள ‘சோலார் இம்பல்ஸ் 2′ (Solar Impulse 2) விமானம், வர்த்தக பயன்பாடுகளுக்கு ஏற்றதா என்பதை ஆராய முதற்கட்ட பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன் படி, உலகம் முழுவதும் 35 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை, 617 மணி நேரத்தில் சுற்றி வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அபுதாபியில் தனது பயணத்தை  தொடங்கிய அந்த விமானம் கடந்த வாரம் இந்தியாவின் அகமதாபாத் நகரத்திற்கு வந்திறங்கியது.

#TamilSchoolmychoice

தங்கள் அடுத்தகட்ட பயணத்தை வாரணாசியில் இருந்து ஆரம்பிக்க நினைத்த விமானிகள் மோசமான வானிலை காரணமாக உடனடியாக அங்கிருந்து புறப்படாமல் பயணத்தை ஒத்தி வைத்திருந்தனர். இந்நிலையில் கடந்த புதன் கிழமை இரவு 9 மணியளவில் வாரணாசிக்கு அந்த விமானம் வந்தது.

India Solar Plane-3இந்த விமானத்தை ஓட்டும் பணியினை, பிக்கார்டும், ஆண்ட்ரே போர்ஷ்பெர்கும் பகிர்ந்துகொள்கின்றனர். அகமதாபாதில் விமானம் இருந்தபோது, அவர்கள் இருவரும் சூழலை மாசுபடுத்தாத தொழில்நுட்பம் குறித்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இந்நிலையில் நேற்று காலை 5.22 மணியளவில் வாரணாசி விமான நிலையத்தில் இருந்து மியான்மர் நோக்கி சூரிய சக்தி விமானம் தனது அடுத்த கட்ட பயணத்தை தொடங்கியது.

மியான்மர் நாட்டின் மாண்டலேவில் தரையிறங்கும் அந்த விமானம், பின்னர் அங்கிருந்து சீனாவின் சாங்கிங் மற்றும் நான்ஜிங் நகரங்களுக்கு பயணப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து அந்த விமானத்தின் பயணம் அமெரிக்காவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.