Home உலகம் கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது ஆஸ்திரேலியா!

கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது ஆஸ்திரேலியா!

448
0
SHARE
Ad

australia-odiwcclb-700அடிலெய்டில், மார்ச் 20 – இன்று நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் 3-வது கால்இறுதி போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது ஆஸ்திரேலியா.

உலக கோப்பை கிரிக்கெட்டில், அடிலெய்டில் இன்று நடந்த 3-வது கால்இறுதியில் 4 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவும் – பாகிஸ்தானும் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

1426836772050முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 8.3 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து, 33 ரன்கள் எடுத்து இருந்தது. இறுதியில் பாகிஸ்தான் 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 213 ரன்கள் எடுத்து, ஆஸ்திரேலியாவிற்கு 214 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

#TamilSchoolmychoice

Pak-vs-Australia-Live-Cricket-Score-20-Mar-Quarter-Final-Match-World-Cup-2015-at-Adelaideபின்னர் விளையாடிய  ஆஸ்திரேலியா 33.5 ஓவரில் 4-ன்கு விக்கெட்களை இழந்து 216 ரன்கள் எடுத்து அரையிறுதிக்குள் நுழைந்தது. அரையிறுதியில் ஆஸ்திரேலியா, இந்தியாவை வரும் 26-ஆம் தேதி சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.