Home உலகம் ஏமன் மசூதிகளில் தற்கொலைப்படை தாக்குதல் – 137 பேர் பலி!

ஏமன் மசூதிகளில் தற்கொலைப்படை தாக்குதல் – 137 பேர் பலி!

606
0
SHARE
Ad

Members of the Houthi militia inspect the scene of a suicide attack targeting the al-Hashahush mosque in Sana?a, Yemen, 20 March 2015. According to reports at least 88 people were killed and many more wounded when one attacker blew himself up inside the Badr mosque in southern Sana'a then another detonated at the mosque's main entrance as worshippers tried to flee, a third explosion targeted the al-Hashahush Mosque in the north of Sana'a. சனா (ஏமன்), மார்ச் 21 – ஏமன் நாட்டின் தலைநகரான சனாவின் மையப்பகுதியில் உள்ள மசூதிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் தொழுகையில் ஈடுபட்டு இருந்த 137 பேர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தென்மேற்கு ஆசியாவின் அரபு நாடான ஏமன், ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் ஒரு பிரிவான ஹெளதி (Houthi) கிளர்ச்சி இயக்கத்தால் கடந்த சில வருடங்களாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சியா பிரிவு இஸ்லாமியர்களுக்கு எதிராக தீவிரவாத செயல்களை செய்து வரும் இவர்கள் பல்வேறு குண்டு வெடிப்புகளையும் நிகழ்த்தி உள்ளனர். இவர்களுக்கு ஐஎஸ் இயக்கம் மற்றும் அல் கொய்தாவுடன் நேரடி தொடர்புள்ளது.

Members of Houthi militia inspect the scene of a suicide attack targeting the al-Hashahush mosque in Sana?a, Yemen, 20 March 2015. According to reports at least 88 people were killed and many more wounded when one attacker blew himself up inside the Badr mosque in southern Sana'a then another detonated at the mosque's main entrance as worshippers tried to flee, a third explosion targeted the al-Hashahush Mosque in the north of Sana'a.

#TamilSchoolmychoice

நேற்று சனாவின் மையப்பகுதியில் உள்ள அல்-பத்ர் மற்றும் அல்-ஹசாஹூஷ் என்ற இரண்டு மசூதிகளில் நுழைந்த தற்கொலைப்படைத் தீவிரவாதிகள் இருவர் தங்கள் உடலில் பொருத்தி இருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தனர். நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமானோர் தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர். அதனால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்க நேரிட்டது.

இரு மசூதிகளின் வளாகம் முழுவதும் ரத்த வெள்ளத்தில் உடல்கள் சிதறிக் கிடந்தன. பலர் ரத்தம் சொட்டச் சொட்ட காப்பாற்றும்படி கதறியதால், அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது.

இது தொடர்பாக உள்ளூர் தொலைக்காட்சிகள் வெளியிட்ட செய்திகளின் படி, சுமார் 137 பேர் பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதனை அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரியும் உறுதி செய்துள்ளார். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

ரத்தம் இல்லை

வெடிகுண்டுத் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு ரத்தம் செலுத்துவதற்கு தேவையான அளவுக்கு இருப்பு இல்லாததால், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ரத்ததானம் செய்ய விரும்புவோர் உடனடியாக மருத்துவமனைகளுக்கு வரும்படி அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

படங்கள்: EPA