Home நாடு சஞ்சீவனின் தந்தை விபத்தில் சிக்கினார் – கொலை முயற்சி என சந்தேகம்!

சஞ்சீவனின் தந்தை விபத்தில் சிக்கினார் – கொலை முயற்சி என சந்தேகம்!

463
0
SHARE
Ad

கோலாலம்பூர், மார்ச் 21 – குற்ற கண்காணிப்பு அமைப்பான ‘மை வாட்ச்’ -ன் தலைவர் ஆர்.ஸ்ரீ சஞ்சீவனின் தந்தை பி.ராமகிருஷ்ணன், கடந்த செவ்வாய்கிழமை நெகிரி செம்பிலான், ஜெம்போல் அருகே காரில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினார்.

ராமகிருஷ்ணன் சென்ற கார் இரண்டு லாரிகளுக்கு இடையில் சிக்கி விபத்திற்குள்ளானது. இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றார்.

11081099_10205282290590449_3976211322633405025_n

#TamilSchoolmychoice

(மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பி.ராமகிருஷ்ணன். படம்: சஞ்சீவன் பேஸ்புக்)

என்றாலும், இது தற்செயலாக நடந்த விபத்து அல்ல என்றும், தனது தந்தையை கொலை செய்ய எடுத்த முயற்சி என்றும் சஞ்சீவன் சந்தேகம் அடைந்துள்ளார்.

“எனது தந்தை நெகிரி செம்பிலான் நோக்கி காரில் சென்று கொண்டிருந்த போது ஒரு சாலை விளக்கில் நின்றுள்ளார். அப்போது வேகமாக வந்த லோரி காரை மோதியுள்ளது” என்று சஞ்சீவன் தெரிவித்துள்ளார்.

முன்னால் ஒரு லோரி பின்னால் ஒரு லோரி என இரண்டு லோரிகளுக்கு இடையில் கார் சிக்கிக் கொண்டதாகவும் சஞ்சீவன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து ஜெம்போல் காவல்நிலையத்தில் புகார் அளித்த சஞ்சீவன், இரண்டு லோரி ஓட்டுநர்களையும் தீர விசாரிக்குமாறு காவல்துறையினரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.