Home கலை உலகம் விழா காலங்களில் மட்டும் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியீடு – தயாரிப்பாளர் சங்கம் அதிரடி!

விழா காலங்களில் மட்டும் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியீடு – தயாரிப்பாளர் சங்கம் அதிரடி!

694
0
SHARE
Ad

rajini-kamal-ajith-and-vijay-absentசென்னை, மார்ச் 21 – திரையரங்குகள் கிடைக்காமல் தவித்து வரும் சிறிய பட்ஜெட் படங்களின் வெளியீட்டை ஒழுங்குபடுத்த புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது கலைப்புலி தாணு தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம்.

இந்த விதிமுறைகளுக்கு அனைத்து தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டு வருகிறது. இதற்கு வழக்கம்போல ஆதரவு, எதிர்ப்பு என இரு பிரிவுகளாக பிரிந்து சண்டையிட தொடங்கியிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

அதிலும், ‘பொங்கல், தமிழ் வருடப் பிறப்பு, உழைப்பாளர் தினம், சுதநதிர தினம், தீபாவளி என வருடத்தில் 10 நாட்களில் மட்டும்தான் 15 கோடி பட்ஜெட்டுக்கு மேல் தயாராகும் பெரிய படங்களை வெளியீடு செய்யவேண்டும்’ என்ற விதிமுறைக்குதான் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

#TamilSchoolmychoice

அதுவும் பெரிய நடிகர்களை வைத்து படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள்தான் போர்க்கொடி தூக்கி உள்ளனர். ‘இந்த விதிமுறையால் மூன்று நான்கு பெரிய படங்கள் ஒரே நாளில் வெளியாகும் சூழ்நிலை உருவாகும். வசூலும் பாதிக்கப்படும்.

இதற்கு சமீபத்திய உதாரணம் வீரம்&ஜில்லா ஒரே நாளில் வெளியானதைச் சொல்லலாம். அந்த இரண்டு படங்களுக்குமே வசூல் பாதிக்கப்பட்டு நஷ்டம் ஆனதற்கு ஒரே நாளில் வெளியானதுதான் காரணம். அதனால் இந்த விதிமுறையை மறுபரிசீலணை செய்யவேண்டும்’ என்கின்றனர்.

அதேபோல தமிழ் சினிமா தயாரிப்புக்கு மூன்று மாதம் இடைவெளி விடுவதாக எழுந்த பேச்சுக்கும் கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ‘வாங்கின கடனுக்கு இந்த மூணு மாசத்துக்கான வட்டியை கொடுக்குறோம்னு சொன்னா, இடைவேலைக்கு சம்மதிக்கிறோம்’ என்கிறார்களாம் சில தயாரிப்பாளர்கள்.