Home அவசியம் படிக்க வேண்டியவை புற்றுநோய் அபாயம்: கருப்பையை அகற்றினார் ஏஞ்சலினா ஜோலி!

புற்றுநோய் அபாயம்: கருப்பையை அகற்றினார் ஏஞ்சலினா ஜோலி!

815
0
SHARE
Ad

Angelina-Jolieநியூயார்க், மார்ச் 25 – புற்றுநோய் தாக்கும் அபாயம் இருந்த காரணத்தினால், தனது இரண்டு மார்பகங்களையும் கடந்த 2013-ம் ஆண்டு அகற்றிய பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, தற்போது அதே காரணத்திற்காக தனது கருப்பையையும் கருமுட்டைக் குழாய்களையும் சிகிச்சை மூலம் அகற்றிக்கொண்டார்.

உலக அளவில் பிரபலமாக இருக்கும் அவர் மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், துணிச்சலுடன் இதனை வெளியிட்டுள்ளார் என  மருத்துவ நிபுணர்களும், புற்றுநோயை எதிர்த்து போராடுபவர்களும் ஏஞ்சலினா ஜோலியின் வெளிப்படைத்தன்மையை வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

ஏஞ்சலினா ஜோலி, நடிகர் பிராட் பிட் தம்பதிக்கு பிறந்த குழந்தைகள் 3, தத்தெடுத்த குழந்தைகள் 3 என மொத்தம் 6 குழந்தைகள் உள்ளனர்.

#TamilSchoolmychoice

ஏஞ்சலினா ஜோலியின் தாயார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக புற்றுநோயுடன் போராடி 56 வயதில் உயிரிழந்தார்.

இதனிடையே, ஏஞ்சலினா ஜோலிக்கு புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய மரபணுக்கள் இருப்பது தெரியவந்த நிலையில் தனக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயத்தை தவிர்ப்பதற்காக கடந்த 2013-ஆம் ஆண்டு மாஸ்டெக்டோமி அறுவை சிகிச்சை முறை மூலம் இரண்டு மார்பகங்களையும் அகற்றிக் கொண்டார்.

இதனை வெளிப்படையாக அறிவித்த ஏஞ்சலினாவை பார்த்து மற்றவர்களும் துணிச்சலுடன் சிகிச்சையை செய்து கொள்ள முன்வந்தனர்.

இதற்காக ‘ஜோலி எஃபெக்ட்’ என்று மருத்துவ உலகில் அவர் பாராட்டப்பட்டார். தற்போது ஏஞ்சலினா தனது கருப்பையையும் கருமுட்டைக் குழாய்களையும் அகற்றிக் கொண்டுள்ளார்.

பிரான்ஸில் இந்த சிகிச்சையை செய்து கொண்டதாகவும், தனது கணவர் பிராட் பிட் மற்றும் குழந்தைகளுடன் நலமுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை வெளிப்படையாக தெரிவிப்பதால் பல உயிர்களை காப்பாற்ற முடியும் என்பதாலே இதனை தெரிவித்திருப்பதாக ஜோலி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.