Home இந்தியா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக நடிகை குஷ்பு நியமனம் – சோனியா காந்தி அறிவிப்பு!

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக நடிகை குஷ்பு நியமனம் – சோனியா காந்தி அறிவிப்பு!

619
0
SHARE
Ad

kushboo-sonia-600புதுடெல்லி, மார்ச் 25 – அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக நடிகை குஷ்புவை அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி நியமனம் செய்துள்ளார்.

தி.மு.க.வில் சில ஆண்டுகாலம் இருந்து வந்த நடிகை குஷ்பு, அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினுடனான மோதலால் கட்சியை விட்டு விலகினார். பின்னர் பாரதிய ஜனதாவில் சேருவார் எனக் கூறப்பட்ட நிலையில் திடீரென சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார் குஷ்பு.

காங்கிரசில் குஷ்பு இணைந்தது முதலே தமிழக காங்கிரஸ் கட்சியில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் நடிகை குஷ்பு முன்னிலைப்படுத்தப்பட்டு வந்தார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் இன்று நடிகை குஷ்புவை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக அக்கட்சித் தலைவர் சோனியா நியமித்துள்ளார். நடிகை குஷ்புவுடன் மொத்தம் 17 பேர் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அஜய் மக்கான், சி.பி. ஜோஷி, சத்யாவர்த் சதுர்வேதி, ஷகீல் அகமது ஆகிய 4 பேரை மூத்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராகவும் சோனியா காந்தி நியமித்துள்ளார்.