Home தொழில் நுட்பம் பேஸ்புக்கைத் தொடர்ந்து ஜிமெயிலிலும் பணப்பரிமாற்ற வசதி! 

பேஸ்புக்கைத் தொடர்ந்து ஜிமெயிலிலும் பணப்பரிமாற்ற வசதி! 

474
0
SHARE
Ad

FBgmailகோலாலம்பூர், மார்ச் 26 – முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் பயன்பாடுகள் மற்றும் செயலிகளில் பணப்பரிமாற்ற வசதிகளை மேம்படுத்தி வருகின்றன. இதற்கான சமீபத்திய உதாரணங்கள் ‘பேஸ்புக்’ (Facebook) மற்றும் ‘ஸ்நாப்சேட்’ (snapchat). இந்நிலையில் அந்த வரிசையில் ‘ஜிமெயில்’ (Gmail)-ஐ களமிறக்க கூகுள் முடிவு செய்துள்ளது.

‘போனி எக்ஸ்பிரஸ்’ (Pony Express) என்ற பெயரில் இரகசியமாக ஜிமெயில் பணப்பரிமாற்ற வசதிக்கான அடிப்படை ஏற்பாடுகளை செய்து வரும் கூகுள், இதனை நான்காவது காலாண்டில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக கூகுள் வட்டாரங்கள் கூறுகையில், “பயனர்கள் ஜிமெயிலை பணப்பரிமாற்ற வசதி மற்றும் இணைய வழி கட்டணம் செலுத்துவதற்கு பயன்படுத்த ஒரு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். தங்கள் ஜிமெயில் கணக்குகளில் ஒருமுறை தங்கள் வங்கிக் கணக்குகள் மற்றும் விவரங்களை பதிவு செய்தால் போதுமானது. அதன் பிறகு இணைய வழி கட்டணம் செலுத்தவும், பணப்பரிமாற்றங்களுக்கும் ஜிமெயிலை பயன்படுத்த முடியும்” என்று தெரிவித்துள்ளன.

#TamilSchoolmychoice

அண்டிரொய்டில் ஏற்கனவே ‘வாலெட்’ (Wallet) என்ற பெயரில் திறன்பேசிகளுக்கான பணப்பரிமாற்ற வசதி இயங்கி வருவதால், கூகுள் ஜிமெயிலில் இதனை செயல்படுத்துவது எளிது. ஆனால், பயனர்களின் வங்கி விவரங்கள் பாதுகாக்கப்படுமா? என்பது கேள்விக்குறி தான்.

லட்சக்கணக்கான ஜிமெயில் மற்றும் பேஸ்புக் கணக்குகள் தினமும் ஹேக் செய்யப்படுவதாக கூறப்பட்டு வரும் நிலையில், ஜிமெயில் போன்ற பயன்பாடுகளில் தனிநபர் வங்கி விவரங்களை கொடுப்பது பயனர்களுக்கு எளிதாக இருக்குமா? என்பதை விட தகவல் திருடர்களுக்கு மிக எளிதாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.