Home உலகம் லீ குவான் இயூவுக்கு பிரதமர் நஜிப் இறுதி அஞ்சலி செலுத்தினார்!

லீ குவான் இயூவுக்கு பிரதமர் நஜிப் இறுதி அஞ்சலி செலுத்தினார்!

590
0
SHARE
Ad

சிங்கப்பூர், மார்ச் 26 – மறைந்த சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் இயூவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று வியாழக்கிழமை சிங்கப்பூர் சென்றார்.

மதியம் 12 மணியளவில் தனது துணைவியார் ரோஸ்மா மான்சோர், வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அனீபா அம்மான் மற்றும் போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் ஆகியோருடன் சிங்கப்பூரை அடைந்தார்.

Lee 4

#TamilSchoolmychoice

(EPA கோப்புப் படம்: கோலாலம்பூரில் அமைந்திருக்கும் சிங்கப்பூர் தூதரகத்தில் வைக்கப்பட்டிருக்கும் இரங்கல் புத்தகத்தில் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கையெழுத்திடுகின்றார்.)

லீ குவான் இயூவின் மகனும், சிங்கப்பூரின் நடப்பு பிரதமருமான லீ சியாங் லூங் மற்றும் அவரது மனைவி ஹோ சிங் ஆகியோரிடம் தனிப்பட்ட முறையில் மலேசியா சார்பில் ஆழ்ந்த இரங்கலை நஜிப் தெரிவித்தார்.

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள லீ குவான் இயூவின் நல்லுடலுக்கு மலேசியாவின் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், பிரதமர் துறை அமைச்சர் டத்தோ மா சியூ கியோங் ஆகியோரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.