Home உலகம் ஜெர்மன்விங்ஸ் விபத்து: துணை விமானி தான் காரணம் – விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!

ஜெர்மன்விங்ஸ் விபத்து: துணை விமானி தான் காரணம் – விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!

730
0
SHARE
Ad

Germanwings-Black-Box

பாரிஸ், மார்ச் 26 – ஜெர்மன்விங்ஸ் விமானம் ஆல்ப்ஸ் மலையில் விழுந்து நொறுங்கி அதில் பயணம் செய்த 150 பேர் பலியானதற்கு துணை விமானி ஆண்ட்ரியஸ் லூபிட்ஸ் (28) தான் காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

கண்டெடுக்கப்பட்ட கறுப்பு பெட்டியில் குரல் பதிவுகளை ஆய்வு செய்ததில் துணை விமானி வேண்டுமென்றே, விமானத்தை தாழ்வாக பறக்க செய்து மலையில் மோதியிருக்கிறார் என்ற அதிர்ச்சித் தகவலை பிரஞ்சு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

முதற்கட்ட விசாரணையில், தலைமை விமானி காக்பிட்டில் இருந்து வெளியேறியவுடன், கதவை தாழிட்டுக் கொண்ட துணை விமானி, மீண்டும் அவர் பலமுறை கதவை திறக்கும்படி கட்டளையிட்ட போதும் திறக்க மறுத்திருக்கிறார்.

விமானம் விழுந்து நொறுங்கும் கடைசி நிமிடம் வரை, துணை விமானி சுய நினைவுடன் தான் இருந்திருக்கிறார் என்பதற்கு ஆதாரமாக, கறுப்புப் பெட்டியின் ஒலிப்பதிவில் அவர் மூச்சுவிடுவது பதிவாகி உள்ளது. இதன் மூலம் துணை விமானி வேண்டுமென்றே விமானத்தை, பயணிகளோடு சேர்த்து அழிக்கும் நோக்குடன் செயல்பட்டிருக்கிறார் என விசாரணை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

எனினும், ஏன் அவர் அவ்வாறு செய்தார் என்பது அடுத்த கட்ட விசாரணையில் தான் தெரியவரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானம் விழுந்து நொறுங்கும் கடைசி நொடிகளில்தான் பயணிகள் அதை உணர்ந்து கதறி உள்ளனர் என்றும் காக்பிட் ஒலிப்பதிவை ஆய்வு செய்த அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.