சிங்கப்பூர், மார்ச் 29 – சிங்கப்பூரின் முதல் பிரதமரும் சிற்பியுமான லீ குவான் இயூவின் நல்லுடல் நாடாளுமன்றக் கட்டிடத்தில் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக நேற்றுவரை வைக்கப்பட்டிருந்தது. இதுவரையில் இலட்சக்கணக்கானோர் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தியுள்ளனர். சிங்கப்பூரின் பல பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சிறப்பு மையங்களிலும் பொதுமக்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இன்று அவரது நல்லடக்கம் நடைபெறவிருக்கும் வேளையில் சிங்கப்பூரில் பொதுமக்கள் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் காட்சிகளில் சிலவற்றை இங்கே காணலாம்:-
25 மார்ச் 2015 – அனல் பறக்கும் வெயிலிலும் தங்களின் தலைவனுக்கு இறுதி மரியாதை செலுத்த குடைகளோடு, வரிசை பிடித்துக் காத்திருக்கும் பொதுமக்கள்….
25 மார்ச் 2015 – லீ குவான் இயூவின் நல்லடலைத் தாங்கிய இராணுவ வாகனம் அதிபர் மாளிகையிலிருந்து நாடாளுமன்ற சதுக்கத்திற்கு இராணுவ மரியாதையுடன் செல்லும் காட்சி.
25 மார்ச் 2015 – இஸ்தானா எனப்படும் அதிபர் மாளிகையில் இருந்து நாடாளுமன்ற சதுக்கத்திற்குக் கொண்டு செல்லப்படும் முன்னர் லீ குவான் இயூவின் நல்லுடல் மீது சிங்கப்பூர் தேசியக் கொடி போர்த்தப்படுகின்றது.
25 மார்ச் 2015 – லீ குவான் இயூவின் நல்லுடலை ஏந்தி இராணுவ வீரர்கள் நாடாளுமன்ற சதுக்கத்திற்கு ஊர்வலமாகக் கொண்டு செல்வதற்காக இராணுவ வாகனத்திற்கு கொண்டு செல்கின்றனர்.
25 மார்ச் 2015 – நாடாளுமன்ற சதுக்கத்தில் லீ குவான் இயூவிற்கு இறுதி மரியாதை செலுத்த நீண்ட வரிசை பிடித்து நிற்கும் மக்கள் கூட்டம்
26 மார்ச் 2015 – லீ குவான் இயூவிற்கு இறுதி மரியாதை செலுத்த காத்திருக்கும் நேரம் மணிக்கணக்காக கூடியதால், சிங்கை இராணுவத்தினர் தற்காலிகமாக கூடாரங்களை ஏற்படுத்தி மக்களுக்கு வசதி செய்து தந்தனர்.
26 மார்ச் 2015 – நாடாளுமன்ற சதுக்கத்தில் லீ குவான் இயூவிற்கு இறுதி மரியாதை செலுத்த வரிசையில் நிற்கும் பொதுமக்களின் கூட்டம் நீண்டு கொண்டே போனதில் சாலைகளும் போக்குவரத்துக்கு மூடப்பட்டன.
27 மார்ச் 2015 – சிங்கப்பூரின் சமூக நிலையம் ஒன்றில் லீ குவான் இயூவிற்கு இறுதி மரியாதை செலுத்த திரண்ட மக்கள், லீ குவான் இயூவின் உருவப் படத்தை வரைந்து, அதனைச் சுற்றி மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்திய காட்சி.
28 மார்ச் 2015 – தங்கள் நாட்டிற்கு ஒரு கௌரவத்தையும், தங்களுக்கு வளமான வாழ்க்கைச் சூழலையும் ஏற்படுத்தித் தந்த தங்கத் தலைவனுக்கு, இரவிலும் கூட காத்திருந்து அஞ்சலி செலுத்திய மக்கள். அவர்களின் வசதிக்காக சிங்கை இராணுவம் தற்காலிக கூடாரங்களை ஏற்படுத்தி இருந்தது.
படங்கள்: EPA