Home உலகம் தனது சொத்துக்களை நன்கொடையாக வழங்க டிம் குக் திட்டம்!

தனது சொத்துக்களை நன்கொடையாக வழங்க டிம் குக் திட்டம்!

706
0
SHARE
Ad

10-1423564251-1கோலாலம்பூர், மார்ச் 28 – ஸ்டீவ் ஜாப்ஸின் மறைவு ஆப்பிளுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியது. இனி ஆப்பிள் அவ்வளவுதான். எத்தகைய புதுமைகளையும் எதிர்பார்க்க முடியாது என விமர்சகர்கள் விமர்சித்துக் கொண்டிருக்கையில், தலைமை ஏற்ற டிம் குக் ஆப்பிள் நிறுவனத்தை வெற்றிகரமாக வழி நடத்தினார்.

ஆப்பிள் நிர்வாகத்திலும், தயாரிப்பிலும் பல்வேறு புதுமைகளை புகுத்திய குக் பற்றி பார்டியூன் இதழ் சிறப்பு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த கட்டுரையில், ஆப்பிள் நிறுவனத்தை நிர்வகிப்பது பற்றி விரிவாக தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ள டிம் குக், தனது செல்வத்தின் பெரும்பகுதியை சேவை அமைப்புகளுக்கு நன்கொடையாக அளிக்க திட்டமிட்டிருப்பதாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “மாற்றத்துக்கான வட்டத்தை உருவாக்கும் குளத்தில் எறியப்படும் கல்லாக இருப்பதை நான் விரும்புகிறேன். எனது 10 வயது மருமகனின் கல்விக்கான தொகையை தவிர மற்ற அனைத்து செல்வங்களையும் நன்கொடையாக வழங்க திட்டமிட்டுள்ளேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் அவர், நன்கொடையாக வெறும் காசோலைகளை எழுதித்தராமல் திட்டமிட்ட முறையில் அதனை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆப்பிளில் தனது பணிக்காக ஆண்டுக்கு 1.75 மில்லியன் டாலரை சம்பளமாகப் பெறும் குக்கின் பங்குகள் மட்டும் 120 மில்லியன் டாலர்  என மதிப்பிடப்பட்டுள்ளது.

Steave-jobs-and-tim-cookஸ்டீவ் ஜாப்சை அடியொற்றி ஆப்பிள் நிறுவனத்தை வழிநடத்தினாலும் பல விஷயங்களில் குக் மாறுபட்டுள்ளார். இருவரின் நிர்வாகத்தையும் ஒப்பிடுவது ஏற்புடையது அல்ல என்றாலும், இருவரும் தங்களது நிர்வாகத்திலும், நம்பிக்கைகளிலும் முற்றிலும் வேறுபட்டுள்ளனர்.

ஜாப்ஸிற்கு நன்கொடை வழங்குவதில் உடன்பாடில்லை, ஆனால் குக் நன்கொடை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். அதேபோல் நிறுவனத்தில் திறந்தவெளி அணுகுமுறை ஊக்குவித்தவர் குக். தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகள் பிரபலமாக பேசப்படுவதையும் அவர் விரும்பி வரவேற்கிறார். இவ்வாறாக அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.