Home இந்தியா ‘லீ குவான் யூ’ மறைவிற்கு இந்தியா முழுவதும் நாளை துக்கம் கடைப்பிடிப்பு!

‘லீ குவான் யூ’ மறைவிற்கு இந்தியா முழுவதும் நாளை துக்கம் கடைப்பிடிப்பு!

1064
0
SHARE
Ad

leeபுதுடெல்லி, மார்ச் 28 – நவீன சிங்கப்பூரின் தந்தை என அழைக்கப்பட்டு வந்தவர், அந்த நாட்டின் முதல் பிரதமர் லீ குவான் யூ (வயது 91). இவர் உடல் நலக்குறைவால் கடந்த 23–ஆம் தேதி மரணமடைந்தார். நேர்மையும், தூய்மையுமான நிர்வாகத்துக்கு பெயர் பெற்றவர் லீ குவான்.

இன்றைக்கு சிங்கப்பூர் அடைந்துள்ள எல்லா முன்னேற்றங்களுக்கும் அவர்தான் பிதாமகன். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத்தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். சிங்கப்பூரில் தமிழ் மொழியையும், அதிகாரப்பூர்வ மொழியாக்கிய பெருமைக்குரியவர் லீ குவான்.

அவரது மறைவையொட்டி அந்த நாட்டின் நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தில், அவருக்கு புகழாரம் சூட்டப்பட்டது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின், கலாசார மையத்தில் லீயின் இறுதிச்சடங்கு, நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகலில் நடக்கிறது.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மந்தை தகன மையத்தில் தகனம் செய்யப்படுகிறது. இறுதிச்சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உலகத்தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

மறைந்த தலைவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்தியா முழுவதும் நாளை தேசிய துக்கம் கடைபிடிக்கப்படும் என மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதன் காரணமாக தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும். எந்த அரசு விழாக்களும் நடத்தப்படமாட்டாது என இந்திய அரசு தெரிவித்தது.