Home உலகம் ஜெர்மன் விங்ஸ் பேரிடருக்கு துணை விமானி தான் காரணம் – இரண்டாவது கறுப்புப் பெட்டி உறுதிப்படுத்தியது!

ஜெர்மன் விங்ஸ் பேரிடருக்கு துணை விமானி தான் காரணம் – இரண்டாவது கறுப்புப் பெட்டி உறுதிப்படுத்தியது!

877
0
SHARE
Ad

பாரிஸ், ஏப்ரல் 3 – பிரான்ஸ் ஆல்ப்ஸ் மலையில் விழுந்து நொறுங்கிய ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் இரண்டாவது கறுப்பு பெட்டி இன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த கறுப்புப் பெட்டியை ஆய்வு செய்த அதிகாரிகள், துணை விமானி தான் வேண்டுமென்றே விமானத்தை மலையில் மோதச் செய்துள்ளார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

french-fly-01

கறுப்பு பெட்டியை ஆய்வு செய்த பிரஞ்சு அதிகாரி ஒருவர் கூறுகையில், “துணை விமானி முதலில் ‘ஆட்டொ பைலட்’ என்று அழைக்கபடும் தானியங்கி முறையில் விமானத்தை 100 அடிக்கு தாழ்வாக பறக்கச் செய்துள்ளார். பின்னர் பலமுறை விமானத்தின் வேகத்தை அதிகரித்துள்ளார் என்தற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice